விமான டிக்கெட் பெற ‘ஆதார்’ கட்டாயம் இல்லை

- in டாப் நியூஸ்
391
Comments Off on விமான டிக்கெட் பெற ‘ஆதார்’ கட்டாயம் இல்லை
aadhar

புதுடில்லி: ‘விமான டிக்கெட் பெறுவதற்கு, ‘ஆதார்’ எண்ணை கட்டாயமாக்கும் திட்டம் இல்லை’ என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வங்கிக் கணக்கு துவங்குவது முதல், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவது வரை, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, விமான டிக்கெட் பெற, ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் என, தகவல் வெளியாகியது. இது குறித்து, உள்துறை விவகாரங்களுக்கான, பார்லி., நிலைக்குழு, எம்.பி.,க்கள், உள்துறை அதிகாரிகளை, நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.

உள்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். ஆதார் தகவல்கள் முழுமையான அளவில் பாதுகாக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டு தலின்படி, பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் பாதுகாப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான டிக்கெட் பெற ஆதார் கட்டாயமாக்கும் திட்டம் இல்லை; இந்த விவகாரத்தில், முடிவு எதையும் அரசு எடுக்கவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Facebook Comments

You may also like

காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் அரசுக்கு முக்கியமா? சென்னை ஐகோர்ட்டு கேள்வி

சென்னை, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா