உயிர் போகும் அபாயம்! இந்த எச்சரிக்கை யாருக்கு தெரியுமா?

- in மருத்துவம்
351
Comments Off on உயிர் போகும் அபாயம்! இந்த எச்சரிக்கை யாருக்கு தெரியுமா?
bad

உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது கல்லீரல். உலக கல்லீரல் தினமான இன்று அதனைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் கல்லீரலில் தான் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும், ஜீரணத்திற்கு உதவிடும் என்பதால் கல்லீரல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது.

மனிதர்களின் இறப்பிற்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது இந்த கல்லீரல் நோய்கள் தான். இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்றவற்றால் கல்லீரல் பாதிக்கப்படும். சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே, என்சைம் கோளாறுகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

வெளியிடங்களில் சாப்பிடுவோர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதே போல கண்ட இடங்களிலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

எந்த ஒரு உடல் உறுப்பிலும் பாதிப்பு என்றால், உடனே அது வெளிப்பட்டுவிடும்.ஆனால், கல்லீரல் அப்படியல்ல அறிகுறிகள் தாமதமாகத்தான் தெரியும். கல்லீரல் பாதிக்கப்படும் நிலையை ஹெபடைட்டிஸ் எனப்படும். அவற்றில் ஏ, பி, சி, டி, இ என்று பல வகைகள் உள்ளன.

சுகாதாரமற்ற குடிநீர், உணவு போன்றவை மூலமாக ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் கிருமி பரவிடும். ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி ரத்தம் மூலமாகவும் உடலுறவு மூலமாகவும் பரவிடும்.

நாள் கணக்கில் வீரியமிக்க மாத்திரைகள் சாப்பிடுவது, மதுப்பழக்கம் போன்றவை கல்லீரலை பாதிக்கும். இதில் மோசமான நிலை என்று சொல்லப்படும் சிரோசிஸ் என்ற நோய் ஏற்பட முக்கிய காரணம் மது அருந்துதல் தான்.

வாய் துர்நாற்றம், கால்கள் வீங்கும், மஞ்சள் காமாலை வரும், வயிற்றின் வலது புறத்தில் வலி ஏற்படும், வயிறு உப்பசமாக இருக்கும், வாந்தி,காய்ச்சல்,மயக்கம் ஏற்படும் எப்போதும் சோர்வாகவே இருப்பர் சிலருக்கு மயக்கம் கூட ஏற்படக்கூடும்.

கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால், மற்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்ட பின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது.

உடல் உறுப்பு தானம் செய்வோரிடம் இருந்து, இறந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் கல்லீரல் பெறலாம் அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து கல்லீரலின் 70 சதவீத பகுதி வரை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தலாம். இதனால், இருதரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாது.

மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.அதே நேரத்தில் சீரான உணவு முறை, உடற்பயிற்சி, உரிய ஓய்வு ஆகியவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Facebook Comments

You may also like

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின்