பாதம் தொடும் நீளமான கூந்தல்.. சீன பெண்களின் ரகசியம்.. கூந்தலை அதிர்ஷ்டம் என்று நம்பும் வினோதம்!!

- in வினோதங்கள்
355
Comments Off on பாதம் தொடும் நீளமான கூந்தல்.. சீன பெண்களின் ரகசியம்.. கூந்தலை அதிர்ஷ்டம் என்று நம்பும் வினோதம்!!
hair_growth001.w245

பொதுவாகவே பெண்களுக்கு கூந்தல் அழகு தான் அதிலும் நீளமான கூந்தல் இருந்தால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நீளமான கூந்தலை வளர்ப்பது மிகவும் கடினம் தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதால் தங்கள் கூந்தலை சரியாக கவனித்து கொள்ள முடியவில்லை. மாசு காரணமாக தலைமுடியும் அதிக அளவில் உதிரும்.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களின் கூந்தல் தரையை தொடும் அளவிற்கு நீண்டு உள்ளது. அங்கு உள்ள பெண்கள் எல்லாருக்குமே நீளமான கூந்தல் தான் குறிப்பாக 2.1 மீட்டர் இருக்கிறதாம் அவர்களின் கூந்தல்.

இவ்வாறான கூந்தலை வைத்து கொண்டால் அதிர்ஷ்டம் என்று நம்புகிறார்கள் அந்த பகுதி மக்கள். இப்படி தலைமுடி வளர்வதற்கு காரணம் என்ன தெரியுமா??

அரிசி கொதித்த தண்ணீர் தான். இதில் தான் தினமும் இவர்கள் தலைமுடியை அலசுவார்களாம். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கொதித்த நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.இதை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலம் கிடைக்கும்.

Facebook Comments

You may also like

மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்

புதுடெல்லி புது டெல்லியில்- ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது தபாஸ்யா