இவை ஏன் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இது பற்றி மீனவர்களிடம் கேட்ட போது பைரோசோம்கள் மீன் மற்றும் இறால் பிடிக்கும் போது தடையாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இது பற்றி தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,
பைரோசோம்கள் உருளையான கடலுக்கு அடியில் வாழக்கூடிய உயிரினம் . இவை தொடுவதற்கு வழவழப்பாக மற்றும் மெல்லியதாக இருக்கும்.
இவை மிதமான வெப்பநிலையில் வாழக்கூடியது. 1980 ஆண்டுகளில் இருந்து இது பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். ஆனால் 2014 ஆம் ஆண்டில் தான் முதல் பைரோசோம் கண்டுபிடிக்கப்பட்டது. இவை பசிபிக் பகுதியை தான் உறைவிடமாக கொண்டுள்ளதா இல்லை குளிர் காலம் வந்தவுடன் வேறு இடத்திற்கு சென்று விடுமா என்பது பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
மேலும் கடல் உயிரினங்கள் இது போன்று வெளியே வருவது சூற்றுச்சூழலில் ஏற்படும் மாறுபாட்டை காட்டுகிறது.
ஆராய்ச்சியின் போது 2 அடி நீளமுள்ள பைரோசோம்கள் ஒரெகன் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது மற்றும் கொலம்பியா ஆற்றில் 60,000 பைரோசோம்கள் இருந்தன. மேலும் இவை பற்றி ஒரெகன் பல்கலைக்கழகம் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.