சிங்கங்கள் சூழ்ந்து இருக்க ஆம்புலன்சில்’ குவாகுவா’

- in டாப் நியூஸ், வினோதங்கள்
404
Comments Off on சிங்கங்கள் சூழ்ந்து இருக்க ஆம்புலன்சில்’ குவாகுவா’
Tamil_News_large_1802536_318_219

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில், 12 சிங்கங்கள் சூழ்ந்து இருக்க பெண் ஒருவருக்கு ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.

 

கிர் காடு அருகில்

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டம், லுநாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் மங்குபென் மக்வானா,32. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மக்வானாவை, கடந்த ஜூன், 29ம் தேதி இரவு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜாப்ராபாத் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், நள்ளிரவு, 2.30 மணிக்கு செல்லும் வழியில் மக்வானாவுக்கு பிரசவ வலி எடுத்து விட்டது.
எனவே, ஆம்புலன்சை நிறுத்தி, அவருக்கு உதவி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த இடம், சிங்கங்களின் வாழ்விடமான கிர் காட்டுக்கு அருகாமையில் இருந்தது. நள்ளிரவில் மனித வாடையை உணர்ந்த சிங்கங்கள் அந்த இடத்தை நோக்கி வந்தன. அதில், மூன்று ஆண் சிங்கங்கள் உட்பட, 12 சிங்கங்கள் ஆம்புலன்சை சூழ்ந்து கொண்டன. இந்த ஆபத்தை நன்கு உணர்ந்து இருந்தாலும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போன் மூலம் டாக்டரை தொடர்பு கொண்டு மக்வானாவின் நிலையை எடுத்து கூறினர். டாக்டரின் அறிவுரைபடி அவருக்கு பிரசவமும் பார்த்தனர்.

 

விளக்கை பார்த்த பிறகு…

ஒரு வழியாக, மக்வானா ஆண் குழந்தையை பெற்று எடுத்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிங்கங்களை விரட்ட சத்தம் போட்டும் ஒரு பயனும் இல்லை. குழந்தை பிறந்த பிறகு ஆம்புலன்சை இயக்கி, முகப்பு விளக்கை போட்ட பின் தான், சிங்கங்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றன. மக்னாவாவும் அவரது குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Facebook Comments

You may also like

காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் அரசுக்கு முக்கியமா? சென்னை ஐகோர்ட்டு கேள்வி

சென்னை, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா