கோயம்புத்தூரில் வீட்டுக்கே விபச்சார அழகிகள் சப்ளை!

- in சமூக சீர்கேடு
49925
call-150x113

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விபச்சார தொழில் நடந்து வருவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விபச்சார கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு கோவை மாநகர போலிஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, போன் செய்தால் வீடுகளுக்கு ஒரு கும்பல் அழகிகளை சப்ளை செய்வதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து போலிசார் போனில் தொடர்பு கொண்டபோது, போனை எடுத்த வாலிபரிடம் ‘எங்களுக்கு அழகி வேண்டும். கோவைக்கு அழைத்து வர முடியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர் கோவையில் போலிசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளது. எனவே கோவை புறநகர் பகுதிக்கு அழகியுடன் வருகிறோம். நீங்கள் சின்னியம்பாளையம் பகுதிக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து, அந்த வாலிபர் திருப்பூரில் தங்கியிருந்த மேற்குவங்காள அழகியுடன் காரில் சின்னியம்பாளையம் சென்றுள்ளார், வாடிக்கையாளர் போல் காத்திருந்த போலிசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். காரில் இருந்த புரோக்கரையும், அழகியையும் மடக்கிப்பிடித்தனர். கைதான புரோக்கர் வெளிமாநிலங்களில் இருந்து அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்துவது தெரியவந்தது. இதுதொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த விபச்சார கும்பல் பற்றி தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவோம் என போலிசார் தெரிவித்துள்ளனர்……!

 

Facebook Comments