கட்டிப்போட்டு காதலனை கற்பழித்த முயன்ற காதலி!.

- in ஹாட் கிசு கிசு
19260
0
imagesதென்கொரியாவில் காதலனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கற்பழிக்க முயற்சித்த காதலியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டின் தலைநகரான சியூல் நகரில் வசித்து வருபவர் ஜீயோன்(45). கணவரை இழந்த விதவையான இவர், அதே நகரில் வசித்து வந்த திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். கடந்த 2011 ஆண்டிலிருந்து இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென மனம் மாறிய அந்த நபர், இனிமேல் கள்ளக்காதலை தொடரப்போவதில்லை என ஜியோனிடம் கூறியுள்ளார். ஆனால், இதை ஏற்க மறுத்த ஜியோன் தன்னை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். எனினும் ஜியோனின் வற்புறுத்தலுக்கு இணங்காத அந்த நபர், வேண்டுமானால் இறுதியாக ஒரே ஒரு முறை மட்டும் உன்னை சந்திக்கிறேன் என்றும், உல்லாசத்திற்கு அழைக்க கூடாது எனவும் கூறிவிட்டு ஜியோனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்பின் வீட்டிற்கு வந்த அந்த நபரை உற்சாகமாக வரவேற்ற ஜியோன், அவருக்கு தெரியாமல் காப்பியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இது அறியாமல் காப்பியை குடித்த அந்த நபர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அந்த நபரை நிர்வாணப்படுத்தியதுடன், அவரை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு உடலுறவு கொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர் விழித்துக்கொள்ள, ஒரு பெரிய இரும்புக் கம்பியைக்கொண்டு அவரை தாக்கியுள்ளார்.
சிறிது நேரத்திற்கு பிறகு கண் விழித்து பார்த்த அந்த நபரை நோக்கி, எல்லாம் முடிந்து விட்டது. உன்னை இனி கொல்ல போகிறேன் என ஆவேசமாக கத்தியுள்ளார். பல போராட்டங்களுக்கு பிறகு, ஜியோனிடமிருந்து தப்பித்த அந்த நபர், போலிசிடம் புகார் அளித்தார். இதனையடுத்து ஜியோனை நேற்று கைது செய்த போலிசார் சிறையில் அடைத்துள்ளனர். தென் கொரிய வரலாற்றிலேயே ஒரு பெண், ஆணை கற்பழிக்க முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது……!

Facebook Comments

Leave a Reply