66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு

- in டாப் நியூஸ்
42
Comments Off on 66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு

லக்னோ: இந்தியா முழுவதும் 66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

ராஜஸ்தானில் அதிகம்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் நுதன் தாக்கூர் என்பவர் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதில்: இந்தியா முழுவதும் 66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 13 பேர் மீதும், தமிழகத்தில் 8 பேர் மீதும், குஜராத்தில் 7 பேர் மீதும், மணிப்பூர் மற்றும் திரிபுராவில் தலா, 4 பேர் மீதும், யூனியன் பிரதேச கேடரை சேர்ந்த 4 பேர், ஆந்திரா, பீஹார், காஷ்மீர், கர்நாடகா, சிக்கிம் மற்றும் உ.பி.,யில் தலா ஒருவர் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது.

 

வழக்கு இல்லை

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்