61வது படத்திற்கு முன் விஜய்யின் திட்டம் இதுதான்

- in Featured, சினிமா
117
Comments Off on 61வது படத்திற்கு முன் விஜய்யின் திட்டம் இதுதான்
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அவருடைய 61வது படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி வரும் ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திரபிரசாத் இம்மாத இறுதியில் தனது பணியை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘பைரவா’ படப்பிடிப்பு முடிந்த பின்னர் விஜய் தனது குடும்பத்தினர்களுடம் வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கவுள்ளதாகவும், ‘பைரவா’ படத்தின் பாடல் வெளியீட்டின்போது அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
வரும் பொங்கல் திருநாளில் ‘பைரவா’ ரிலீசுக்கு பின்னரே விஜய் 61′ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்