“வாய் திறக்க மறுக்கும் மோடி” – ராகுல் தாக்கு

- in டாப் நியூஸ்
85
Comments Off on “வாய் திறக்க மறுக்கும் மோடி” – ராகுல் தாக்கு

புதுடில்லி: நாட்டில் பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் பெருகி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி வாய் திறந்து பேசாமல் மவுனம் காக்கிறார் என காங்., தலைவர் ராகுல் ஆவேசமாக பேசினார்.
“அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் ” என்ற பேரணி டில்லியில் நடந்தது. இதனையொட்டி டில்லியில் தால்கோத்ரா ஸ்டேடியத்தில் நடந்த கூட்டத்தில் காங்., தலைவர் ராகுல் பேசுகையில்; தலித்துகளுக்கு எதிரான அரசு நடக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகிறது.
தலித் மக்களுக்கு பிரதமர் மோடியின் இதயத்தில் இடம் இல்லை. நிரவ்மோடி, லலித்மோடி, மல்லையா ஆகியோரை தப்பிக்க விட்டனர். ஆனால் இது போன்ற விஷயங்கள் குறித்து மோடி பார்லியில் வாய்திறக்க மறுக்கிறார். பார்லி.,யில் பேச அஞ்சுகிறார். பார்லி.,யில் எனது கேள்விக்கு பதில் சொல்லட்டும், நான் நேருக்கு நேர் விவாதிக்க தயார்.

நீதிதுறையில் தலையீடு
அரசு நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. மோடி அரசு நீதி துறையில் தலையிடுகிறது. நீதிமன்றத்தில் இருக்கும் நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து விட்டது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து பிரதமர் வாய் திறக்க மறுக்கிறா். அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. மத்திய அரசின் கொள்கையில் தலித் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பிரதமர் தன்னை முன்னிலைப்படுத்துவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார்.

ஏழைகளையும், தலித் மக்களையும் மோடி மறந்து விட்டார். இளைஞர்களுக்கென இந்த மோடி அரசு செய்தது என்ன ? விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. மன் கி பாத் நடத்தும் பிரதமர் மக்களின் மனதில் இருப்பதை கேட்க வேண்டும். உலக அளவில் இந்தியாவின் மதிப்பு குறைய வேண்டும். ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கும் பணியே காங்கிரஸ் பணி. இவ்வாறு ராகுல் பேசினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்