- in டாப் நியூஸ்
43
Comments Off on

மும்பை: பிரதமர் மோடியின் உறுதி தன்மையால்தான், ஜி.எஸ்.டி., ரூபாய் நோட்டு வாபஸ் ஆகிய முடிவுகளை வெற்றிகரமாக அமல்படுத்துவது சாத்தியமானது என கோவா முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான மனோகர் பரீக்கர் தெரிவித்தார்.

மோடியே காரணம்:மும்பை ஐ.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரீக்கர் பேசியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, ஜி. எஸ்.டி., ஆகியவை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதற்கு, பிரதமர் மோடியின் சிறந்த தலைமையே காரணம். மோடியின் இந்த தைரியமான முடிவுகள், வரும் ஆண்டுகளில், சர்வதேச அளவில், இந்தியாவை சிறந்த பொருளாதார சக்தியாக உருவாக்கும். பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதற்கும், மோடியின் தைரியம் தான் காரணம்.

சிறந்த தலைவர்:சிறந்த தலைமைத்துவம், அறிவுநுட்பம், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களே அரசியலுக்கு தேவை. ஜாதியை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்தவர்கள் தற்போது சிறையில் உள்ளனர். மக்களிடமிருந்து தலைவர்களுக்கு அதிக நிர்பந்தங்கள் வர தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்