4 வருடத்தில் 19 தடவை மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வந்த மோடி !

- in டாப் நியூஸ்
43
Comments Off on 4 வருடத்தில் 19 தடவை மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வந்த மோடி !
இந்திய பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இது வரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால், இதுவரை அவர் மொத்தம் 19 முறை மட்டுமே நாடளுமன்றத்திற்கு வந்துள்ளாராம்.

இதனால் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வந்த இந்த நாட்களிலும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார். மக்களின் முக்கியமான பிரச்சனைகளை குறித்து அவர் பெரிதாக எதும் பேசவே இல்லை.
பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார், அவர் நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டில்தான் அதிக நாட்களை கழித்துள்ளார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.
மேலும், பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்