யாழில் 15 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- காரணங்கள் புதுசு

- in சமூக சீர்கேடு
386
Comments Off on யாழில் 15 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- காரணங்கள் புதுசு
9bf31c7ff062936a96d3c8bd1f8f2ff3_1476857607-s-300x190

யாழில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்.கீரிமலை நகுலேஸ்வரா வீதியை சேர்ந்த அரியசேகரம் தர்ஷிகா (வயது15) என்ற மாணவியே உயிரிழந்தவராவார். நேற்று காலை 9.30 மணியளவிலேயே வீட்டின் அறை ஒன்றில் இருந்தே மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படை க்கப்பட்டு பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொலிஸில் முறையிட்டதனை தொடர்ந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மனவிரக்தி காரணமாகவே பிரஸ்தாப மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

Facebook Comments