காதலியை நண்பருக்கு விருந்தாக்கிய காதலன் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி..!

- in ஹாட் கிசு கிசு
73
Comments Off on காதலியை நண்பருக்கு விருந்தாக்கிய காதலன் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி..!
kaniya-kumari-1-350x169

குமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த பாகோடு காலனியைச் சேர்ந்தவர் பிரிஜித் என்ற சுரேஷ் (வயது27). சுரேஷ் அந்த பகுதியில் ஆட்டோ மற்றும் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக நாகர் கோவிலுக்கு வேன் ஓட்டி சென்றார்.இவரது வேனில் நாகர் கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அடிக்கடி பயணம் செய்தார். அப்போது அந்த மாணவிக்கும் சுரே சுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.இந்த நிலையில் மாணவி கடந்த 13-ந்தேதி முதல் திடீரென மாயமானார். அவரை காணாமல் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை.இதனால் மாணவியின் தந்தை, மகளை காணவில்லை என தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நாகர் கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் இளம் பெண்ணும், சில வாலிபர்களும் தகராறு செய்வதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மோகன்அய்யர் மற்றும் போலீசார் அங்கு விரைந்துச் சென்றனர். அதற்குள் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இளம் பெண் மட்டும் தனியாக அழுது கொண்டு இருந்தார்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மாணவி, திக்கணங்கோட்டில் இருந்து மாயமானவர் என தெரியவந்தது. மேலும் அவர் தன்னை காதலன் சுரேஷ் கடத்தி வந்து கற்பழித்ததாகவும், பின்னர் அவரது நண்பர்களுக்கு விருந்தாக்கியதாகவும் பரபரப்பு புகார் கூறினார். போலீசாரிடம் மாணவி கூறியதாவது:-

நாகர்கோவில் கல்லூரியில் இருந்து ஊருக்கு செல்லும் போது வேன் டிரைவர் சுரேசுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறினார். அதனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்தேன். என்னை சுரேஷ் குழித்துறை உள்பட பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். பின்னர் நாங்கள் இருவரும் நாகர்கோவில் வந்தோம்.இரவில் தங்க இடமின்றி தவித்த போது, சுரேசின் நண்பர் தினேஷ் மற்றும் கோபால் ஆகியோர் உதவிக்கு வந்தனர். அவர்கள் வடசேரி பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து கொடுத்தனர். அங்கு நானும் சுரேசும் தங்கினோம். அன்று சுரேஷ் என்னை பாலியல்பலாத்காரம் செய்தார்.மறுநாள் காலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறி எனது நகைகளை வாங்கிக் கொண்டார். அதனை அடகு வைத்து தாலி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகிறேன் என்று கூறி வெளியேச் சென்றார். திரும்பி வரும் போது அவரது நண்பர்கள் தினேஷ், கோபால் ஆகியோரும் வந்தனர்.அவர்களுடன் என்னை தனியாக இருத்தி விட்டு சுரேஷ் வெளியேச் சென்று விட்டார். சுரேஷ் வெளியேச் சென்ற பின்பு அவரது நண்பர்கள் என்னை கத்தி முனையில் மிரட்டி கற்பழித்தனர்.
இதற்கிடையே சுரேசின் இன்னொரு நண்பரும், லாட்ஜில் பக்கத்து அறையில் தங்கி இருந்தவருமான ஞானபிரவினும் என்னை பலாத்காரம் செய்தார்.இதன்பிறகு தான் காதலனே என்னை நண்பர்களுக்கு விருந்தாக்கியது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த நான் சுரேஷ் மற்றும் அவர்களின் நண்பர்களுடன் தகராறு செய்தேன். அப்போது தான் போலீசார் வந்து என்னை மீட்டனர். என்னை ஏமாற்றி, மிரட்டி கற்பழித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.அதன்பேரில் வடசேரி போலீசார் வேன் டிரைவர் சுரேஷ் அவரது நண்பர்கள் வடசேரி அறுகுவிளையைச் சேர்ந்த தினேஷ்(24), கோபால்(47) மற்றும் ஞானபிரவின் ஆகிய 4 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 376(கற்பழிப்பு) 506/2(கொலை மிரட்டல்), 342, 406, 417 ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.அவர்களில் மாணவியின் காதலன் சுரேஷ், கோபால், தினேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் கோபால் முன்னாள் போலீஸ்காரர் ஆவார். இவர் பணியில் ஒழுங்கீனமாக நடந்ததால் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்.தினேஷ் மற்றும் ஞானபிரவின் இருவரும் தொழிலாளிகள். ஞானபிரவின் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரையும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.மீட்கப்பட்ட கல்லூரி மாணவி தக்கலை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்குமருத்துவ பரி சோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்

Facebook Comments