திருமலையில் மசாஜ் நிலையங்கள்! 24 பேர் எயிட்ஸ் நோயால் பாதிப்பு….

- in சமூக சீர்கேடு
10652
RINGO-300x193

1997ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 24 பேர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளானமை தொடர்பில் இனங்காணப்பட்டதுடன், இவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் சிகிச்சைப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி, வைத்தியர் வி.கௌரீஸ்வரன் தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியிலிருந்து இதுவரையில்; 12 நோயாளர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை மாவட்டத்தின்; கன்னியா வெந்நீரூற்று, நிலாவெளிக் கடற்கரை, மாபில்பீச், இயற்கைத் துறைமுகம், புறாமலை ஆகிய இடங்களுக்கு உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது. அத்துடன், அதிகளவில் மசாஜ் நிலையங்களும்; காணப்படுகின்றன. எனவே, மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்;.

மேலும், இம்மாவட்டத்தில் பாலியல் நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Facebook Comments