2 வரி கூட எழுத தெரியாத ராகுல்: பா.ஜ., பதிலடி

- in டாப் நியூஸ்
81
Comments Off on 2 வரி கூட எழுத தெரியாத ராகுல்: பா.ஜ., பதிலடி

புதுடில்லி : கர்நாடக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்., தலைவர் ராகுல், பிரதமர் மோடியையும், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசையும் கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் பேசினார். 15 நிமிடம் நேரடியாக விவாதம் நடத்த தயாரா எனவும் ராகுல் சவால் விட்டிருந்தார்.

பயம்:

இதற்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது. டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் ஸ்வராஜ், ராகுலின் பேச்சில் ஒன்றுமில்லை. அவரது பேச்சு பதற்றத்தையும், பயத்தையும் மட்டுமே வெளிப்படுத்துவதாக உள்ளது. நாட்டு மக்கள் வாரிசு அரசியலை புறக்கணித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. ஆனால் ராகுல், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு பதில், வாரிசு அரசியலை பாதுகாக்க நினைக்கிறார்.

காங்.,க்கு ராணுவம், தேர்தல் கமிஷன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி, ரிசர்வ் வங்கி, பிரதமர் அலுவலகம் என அரசியலமைப்பின் அங்கங்களான எதன் மீதும், யார் மீதும் நம்பிக்கை இல்லை. இது ஜனநாயகத்திற்கும் வாரிசு அரசியலுக்கும் நடக்கும் போர். அவர்கள் குடும்பம் நாட்டிற்கு உரிய உரிமத்தை எப்போதும் வழங்கியதில்லை. ராகுல் இன்று தனது ஏமாற்றம், கோபத்தையே காட்டி உள்ளார்.

நேரு, பிரதமர் ஆவதற்காக பிரிவினைக்கு ஒப்புக் கொண்டார். இந்திரா, அவசரநிலையை கொண்டு வந்தார். ராஜீவ், தான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிய கலவரத்தை தொடர அனுமதித்தார். சோனியாவோ, ராகுலை நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. மொபைல் போனை பார்க்காமல் 2 வரி கூட எழுத தெரியாதவர் 15 நிமிடம் விவாதம் நடத்துவது பற்றி பேசுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்