14 வயது சிறுமியை பலாத்காரம் அகில் பாரத் விகாஷ் இயக்கத்தின் தலைவர் கைது

- in டாப் நியூஸ்
65
Comments Off on 14 வயது சிறுமியை பலாத்காரம் அகில் பாரத் விகாஷ் இயக்கத்தின் தலைவர் கைது
அகர்தலா:
 இந்த சம்பவம் தொடர்பாக திரிபுரா போலீசார் கூறியதாவது:-
ஹோவாய்  தெலியமுரா என்ற பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி  ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் 2017-ம் ஆண்டு முதல் தம்மை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து தொழிலதிபர் ஒருவர் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அச்சிறுமி மிரட்டப்பட்டிருக்கிறார். தற்போது பண்ணை வீட்டில் இருந்து தப்பி போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் 58 வயதான மனோஜ் கோஷ் என்ற தொழிலதிபரை கைது செய்திருக்கிறோம் என கூறி உள்ளனர்.
இதனிடையே கைது செய்ப்பட்ட மனோஜ் கோஷ் அகில் பாரத் அகண்ட விகாஸ் பரிஷத் என்ற அமைப்பின் தலைவர் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் மனோஜ் கோஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி என்கிறது சிபிஎம். ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இதனை மறுத்துள்ளது. தங்களது இயக்கத்துக்கும் மனோஜ் கோஷூக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஸ்வ ஹிந்து பரிஷத் விளக்கம் அளித்துள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்