11 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் மனசாட்சிபடியே தீர்ப்பு வழங்கினோம் : தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி

- in டாப் நியூஸ்
118
Comments Off on 11 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் மனசாட்சிபடியே தீர்ப்பு வழங்கினோம் : தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி

சென்னை : 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் மனசாட்சிபடியே தீர்ப்பு வழங்கினோம் என்று  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார் . மனசாட்சிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கவில்லை என்பது கடவுளுக்கு தெரியும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதனிடையே நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்த இந்திரா பேனர்ஜி,  தமிழக மக்களுக்கு நீதிபதிகளை பற்றி நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பாக பல்வேறு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டது.11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பை  டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்திருந்தார். தீர்ப்பு விலை கொடுத்து வாங்கப்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி முன்பு  தங்க தமிழ்ச்செல்வனின் விமர்சனம் குறித்து வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் முறையிட்டார்.மேலும்  தங்க தமிழ்ச்செல்வனின் இத்தகைய விமர்சனம் மக்கள் மத்தியில் நீதித்துறை மீது ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் என்றும் எனவே இதுபோன்ற விமர்சனங்கள் தெரிவிப்பதை ஆரம்பத்திலேயே கிள்ளி விடாவிட்டால் நீதித்துறை மீதான  நம்பிக்கை மக்கள் மத்தியில் போய்விடும் என்றும் தெரிவித்தார். மேலும் இத்தகைய விமர்சனங்களை தெரிவித்த  தங்க தமிழ்ச்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  சூர்ய பிரகாசம் முறையிட்டார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, இது போன்ற வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும் போது பலதரப்பட்ட விமர்சனங்கள் வரும் என்பது நாங்கள் தெரிந்த ஒன்றே என்று கூறினார். அது மட்டுமல்லாமல் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பானது தங்களுடைய மனசாட்சிக்கு விரோதமாக வழங்கவில்லை என்பது அந்த கடவுளுக்கு தெரியும் என்று தெரிவித்த நீதிபதி, தீர்ப்பு குறித்த எவ்வித விமர்சனங்களுக்கும் நாங்கள் கவலைப்படவில்லை என்று கூறினார்.

இதையடுத்து  தமிழகம் அதிகம் படித்தவர்கள் கொண்ட மாநிலமாக விளங்கி வரும் சூழ்நிலையிலேயே அரசியல் ஆதாயத்திற்காகவே ஒருசிலர் நீதிமன்ற உத்தரவுகளை விமர்சனம் செய்கிறார்கள் என்றும் அவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்வதோ, நடவடிக்கை எடுப்பதோ நாங்கள் செய்ய போவதில்லை, வேண்டுமானால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தால் நீதிமன்ற விடுமுறை நாட்களுக்கு பிறகு ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்.

இதற்கிடையே 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று  தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார். 18 தொகுதிகளும் காலியாக உள்ளதால் தேர்தல் நடத்தக்கோரி தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்