ஹவாய் தீவில் 500 முறை நில நடுக்கம் மக்க பீதி !

- in டாப் நியூஸ்
53
Comments Off on ஹவாய் தீவில் 500 முறை நில நடுக்கம் மக்க பீதி !
பல வெடிக்கக்கூடிய எரிமலை கொண்டுள்ளது ஹவாய் தீவு. மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் இந்த தீவில் கடந்த ஒருமாதமாக எரிமலை வெடிப்பு சம்பவம் அதிக அளவில் நடந்து வருகிறது. 

தற்போது மீண்டும் கிலாயூ என்ற எரிமலை வெடித்துள்ளது. இதன் காரணமாக தொடர் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த எரிமலை கடந்த ஒரு மாதத்தில் 7 முறை வெடித்துள்ளது என கூறப்படுகிறது.
எரிமலையின் தொடர் வெடிப்பு காரணமாக அந்த பகுதி முழுவதும் எரிமலை குழம்பு பரவி இருக்கிறது. எரிமலை வெடிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அந்த எரிமலையை சுற்றிய 5 கிமீ பகுதியில் 500 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக 8000 அடி உயரத்திற்கு தூசுகளும், புழுதிகளும் எழுந்துள்ளது. எரிமலையை சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் பகுதி வரை புகை மண்டலம் சூழ்ந்துள்ளதாம்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்