ஸ்டெர்லைட் வழக்குகள் இன்று விசாரணை: வைகோ ஆஜராகி வாதாடுகிறார்

- in டாப் நியூஸ்
52
Comments Off on ஸ்டெர்லைட் வழக்குகள் இன்று விசாரணை: வைகோ ஆஜராகி வாதாடுகிறார்
தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தாலும் சமீபத்தில் நடந்த போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. இந்த போராட்டத்தின் 100வது நாளில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு குறித்து 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற கிளையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜராகி வாதாடுகிறார். அவர் ஸ்டெர்லைட்டுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vaiko

ஆனால் அவர் கோரியிருந்தவாறு ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டுக்கு கொடுத்திருந்த அனுமதியை திரும்ப பெற்றுவிட்டதால் இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்