வைகோவோடு இனைய தயார்- நாஞ்சில் சம்பத்

- in டாப் நியூஸ்
70
Comments Off on வைகோவோடு இனைய தயார்- நாஞ்சில் சம்பத்
மதிமுக, அதிமுக, தினகரன் அணி என கடந்த சில வருடங்களில் கட்சிகள் மாறி மாறி அரசியல் செய்து கொண்டிருந்த நாஞ்சில் சம்பத், சமீபத்தில் தினகரன் அணியில் இருந்து விலகினார். தினகரன் கட்சியில் திராவிடம் இல்லை என்பதற்காகவே அவர் விலகியதற்கு காரணமாக கூறப்பட்டது. மேலும் இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை, தமிழுக்கு தொண்டு செய்ய போவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ என்ற படத்தில் அவருடயை தந்தையாக நாஞ்சில் சம்பத் நடித்து வருகிறார். தற்போது அவர் மீண்டும் அரசியல் பக்கம் செல்லவுள்ளதாகவும், தாய்க்கழகமான வைகோவின் மதிமுகவில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
vaiko

இதனை உறுதி செய்வதை போல் ஸ்டெர்லைட் மூடப்பட்டதற்கு வைகோதான் காரணம் என்றும், அவர் ஸ்டெர்லைட் நாயகன் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பிதாமகன், கதாநாயகன் வைகோதான் என்றும், தேவைப்பட்டால் மக்களுக்காக வைகோவுடன் இணைந்து போராட தயார் என்றும் நாஞ்சில் சம்பத் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். எனவே வைகோ தலைமையில் நாஞ்சில் சம்பத் விரைவில் மதிமுகவில் இணையும் நாள் வெகுதூரம் இல்லை என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்