வேலைக்கு போவதா? வங்கியில் வரிசையில் நிற்பதா? விஜய்சேதுபதி

- in Featured, சினிமா
158
Comments Off on வேலைக்கு போவதா? வங்கியில் வரிசையில் நிற்பதா? விஜய்சேதுபதி
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு வெளிவந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டபோதிலும், பழைய நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களை பெறுவதில் சிக்கல் இருந்து வருவதால் இன்னும் பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு வரவில்லை.
இதுகுறித்து நடிகர் விஜய்சேதுபதி கூறியபோது, ‘சென்னை போன்ற பெருநகரங்களிலேயே வங்கியின் முன் நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருக்கும் நிலையில் கிராமங்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக உள்ளது. கிராமங்களில் தினமும் வேலை பார்த்தால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் அவர்கள் வேலைக்கு போவார்களா? அல்லது வங்கியின் முன் வரிசையில் நிற்பார்களா?
என்னுடைய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது மருத்துவ செலவுக்கு நானே புதிய நோட்டுக்களை பெற கஷ்டப்பட்டேன். இந்நிலையில்  மற்றவர்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்று யோசித்து பார்த்தேன். அதே நேரத்தில் இவை அனைத்துமே ஒரு நல்ல மாற்றத்திற்கான வழி என்றால் சந்தோஷமே’ என்று கூறினார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி