வெட்கமா இல்ல, செருப்பால அடிப்பேன்: நேரடி நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆவேசம்…

- in டோன்ட் மிஸ்
180
Comments Off on வெட்கமா இல்ல, செருப்பால அடிப்பேன்: நேரடி நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆவேசம்…

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரினச்சேர்க்கையாளரான ஒரு பெண்ணை பார்த்து உனக்கு வெட்கமாக இல்லையா, செருப்பால் அடிப்பேன் என நடிகை கீதா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் நடிகை கீதா பதுக்கு ஜதகா பன்டி என்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். குஷ்பு நடத்தும் நிகழ்ச்சி போன்று தான் இது. குடும்ப பிரச்சனைகளை கேட்டு பின்னர் மனோதத்துவ நிபுணர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஓரினச்சேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள் கலந்து கொண்டனர். ஓரினச்சேர்க்கையாளர்களில் ஒருவருக்கு 20 வயது. தன்னை ஆணாக கருதும் பெண்ணுக்கு 23 வயது. கடந்த 31ம் தேதி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் அந்த பெண்கள் பெற்றோர்களுடனான பிரச்சனையை தீர்த்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

தன்னை ஆணாக நினைக்கும் பெண்ணை முதலில் அழைத்து பேசினார் கீதா. அதன் பிறகு மற்றொரு பெண், அவர்களின் பெற்றோர், மனோதத்துவ நிபுணர் மற்றும் வழக்கறிருடன் பேசினார் அவர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண் தான் எப்படி ஆணாக உணர்கிறார் என்பதை தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களை போன்று முடி வெட்டிக் கொண்டதையும் கூறினார். இதை கேட்ட கீதா கடுப்பாகி திட்ட அவர் அமைதியானார்.

ஆணாக நினைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக இளம்பெண் கூறினார். இதை கேட்ட கீதா அவரைப் பார்த்து, உனக்கு வெட்கமாக இல்லையா, செருப்பால் அடிப்பேன் என்றார். இந்த சம்பவம் ஓரினச்சேர்க்கையாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.