விளையாட்டு ஆர்வத்தில் தந்தையின் பணத்தை செலவு செய்த 5 வயது சிறுவன்

- in பல்சுவை
295
Comments Off on விளையாட்டு ஆர்வத்தில் தந்தையின் பணத்தை செலவு செய்த 5 வயது சிறுவன்

பிரித்தானியாவில் 5 வயது சிறுவன் ஒருவன் விளையாடுவதற்காக தனது தந்தையின் கணக்கில் இருந்த பணத்தை செலவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் நோர்த்தாம்ப்டன்சயர் மாகாணத்தில் உள்ள கிங்ஸ்தோர்பி பகுதியை சேர்ந்தவர் அலிஸ்டெயர் லீத்.

இவர் முகநூலில் தனது கிரிடிட் கார்ட் மற்றும் வங்கி கணக்கு ஆகியவைகளை பதிந்துவைத்திருந்தார்.

விளையாட்டுகள் மற்றும் ஆப்ஸ் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக அவர் இதை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது 5 வயது மகனான அலெக்ஸாண்டர் தனது தந்தையில் கணணியில் ஜூசி ஜாம் விளையாடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் விளையாட்டில் அடுத்த நிலைக்கு செல்வதற்காக தனது தந்தையின் கிரிடிட் கார்டின் எண்ணை பயன்படுத்தி 400 யூரோவை செலவு செய்துள்ளார்.

இந்நிலையில் கிரிடிட் கார்டின் பில்லை பார்த்த லீத் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது, குழந்தைகள் பணத்தை எளிதாக கையாளும் வகையில் விளையாட்டு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது அமைப்புகளை வைத்துள்ளனர். இது மிகவும் தவறாக போக்கு. எனது குழந்தையின் இந்த செயல் எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது, எனினும் அவன் மேல் எனக்கு கோபம் இல்லை.

அவன் என்ன செய்தான் என்றே அவனுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த புகாரையடுத்து முகநூல் நிர்வாகம் அவருக்கு பணத்தை திரும்ப அளித்துள்ளது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.