விராத் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக எம்.எல்.ஏ

- in டாப் நியூஸ்
48
Comments Off on விராத் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக எம்.எல்.ஏ
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியின் பிட்னெஸ் சவாலை பிரதமர் நரேந்திரமோடி ஏற்று சமீபத்தில் தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டார் என்பது தெரிந்ததே. இந்த வீடியோ பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது மட்டுமின்றி ஒருசிலரின் கிண்டலுக்கும் ஆளானது.
இந்த நிலையில் பாஜாக எம்.எம்.ஏ ஒருவர் விராத் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் விராத் கோஹ்லி பெண்களுக்கு ஆண் நண்பர்கள் அவசியம் என்றும் ஆண் நண்பர்கள் இல்லாத பெண்கள், வெறும் அலங்கார கல்லிற்கு சமம்’ என்றும் கூறியிருந்தார்.
Virat Kohli

இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த, பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ., பன்னாலால் ஷக்யா என்பவர், ‘பெண்கள், ஒழுக்கத்துடனும், கலாசாரத்துடனும் வளர வேண்டும் என்றும், அவர்கள், ஆண்களுடன் நட்பு பாராட்டி, ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஒழுக்கமற்ற தலைவரை பிள்ளையாக பெறுவதை விட, மலடியாக இருப்பதே மேல் என்றும் பேசினார்.

மேலும் தேசப்பற்று குறித்து பேச, விராத்கோஹ்லிக்கு எந்த தகுதியும் கிடையாது என்றும் இந்திய அணிக்காக விளையாடி, நம் நாட்டில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் அவர், இத்தாலி நாட்டிற்கு சென்று, அங்கு திருமணம் செய்தார். பணம் சம்பாதிப்பது இங்கே; அதை செலவு செய்வது வெளிநாட்டில்; இது தான், அவரது தேசப்பற்று என்றும் கூறியுள்ளார். விராத் கோஹ்லியை அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்