விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

- in Sports
240
Comments Off on விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
dc-Cover-uv17ihgu4fm38choji25dchod5-20160223164913.Medi

ஐபிஎல் லீக் போட்டியில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி (80), டிவில்லியர்ஸ் (83) ஜோடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதில் பெங்களூர் அணி பந்துவீசும் போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments