விமானத்தை ஓட்டிக்கொண்டு மொடலுடன் ‘செல்பி’ எடுத்த விமானிகள்: பணியிலிருந்து நீக்கிய நிர்வாகம்

- in பல்சுவை
255
Comments Off on விமானத்தை ஓட்டிக்கொண்டு மொடலுடன் ‘செல்பி’ எடுத்த விமானிகள்: பணியிலிருந்து நீக்கிய நிர்வாகம்

அர்ஜெண்டினா நாட்டு பயணிகள் விமானத்தில், விமானிகளின் அறைக்குள் மொடல் ஒருவரை அனுமதித்தது மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து ‘செல்பி’ படங்கள் எடுத்துக்கொண்ட இரண்டு விமானிகளை நிர்வாகம் அதிரடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளது.
அர்ஜெண்டினாவை சேர்ந்த Victoria Xipolitakis என்ற மொடல் அழகி, அந்நாட்டை சேர்ந்த அரசு விமானமான Austral 2708 என்ற பயணிகள் விமானத்தில் அண்மையில் பயனம் செய்துள்ளார்.

Buenos Aires நகரிலிருந்து Rosario நகருக்கு பறந்துக்கொண்டிருந்த அந்த விமானத்தில் இருந்த மொடலை, விமானிகள் இருவர் ‘காக்பிட்’ என்று சொல்லக்கூடிய விமானிகள் ஓட்டுனர் அறைக்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர், மொடல் அழகி கவர்ச்சிகரமாக வித விதமான ’போஸ்’ கொடுக்க விமானிகள் இருவரும் அவருடன் சேர்ந்து ’செல்பி’ படங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், மொடலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட விமானிகள் இருவரும் அந்த பெண்ணிற்கு விமானத்தை எப்படி ஓட்டுவது என அவரை விட்டு பயிற்சியும் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்ட அந்த மொடல், ’விமானத்தை விமானிகள் ஓட்டுவதற்கு தானும் உதவி செய்தேன்’ என பெருமையாக பதிவு செய்தது விமான நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது.

புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான நிறுவன உயர் அதிகாரிகள், விமான பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக விமானிகள் இருவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்குவதுடன், அவர்கள் இருவர், மற்றும் அந்த மொடல் அழகி மீதும் வழக்கு தொடக்க உள்ளதாக தெரிவித்தனர்.

டுவிட்டர் பக்கத்தில் வெளியான புகைப்படங்கள், விமானம் வானத்தில் பறந்துக்கொண்டு இருந்தபோது எடுக்கப்பட்டதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்காவில் 9/11 சம்பவத்திற்கு பிறகு, விமானிகள், ஆய்வாளர்கள் மற்றும் விமான குழுவினர் தவிர வேறு எவரையும் விமானிகள் அறைக்கு அனுமதிக்க கூடாது என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.