விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்…

- in ஸ்மைல் ப்ளீஸ்
92
Comments Off on விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்…
சாலை விபத்தில் சிக்கி, ஆம்புலன்சுக்காக காத்திருந்த ஒரு பென்ணை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாகனத்தில் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். இன்று முழுவதும் அவர் கன்னியாகுமாரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண் வலியுடன் சாலையில் ஆம்புலன்சுக்காக காத்துக்கொண்டு இருந்தார். அதைக்கண்ட கமல்ஹாசன் அந்த பெண்மணியை தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். கமல்ஹாசனின் இந்த செயலை அந்தப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருவதோடு, நெட்டிசன்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

 

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.