விஜய் 61 படத்தின் இசையமைப்பாளர் யார்?

- in Featured, சினிமா
96
Comments Off on விஜய் 61 படத்தின் இசையமைப்பாளர் யார்?
இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் ‘பைரவா படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘விஜய் 61’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமானதான செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி ‘விஜய் 61’ குழுவினர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
‘விஜய் 61’ படத்திற்கு இசையமைப்பது யார்? என்று விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்