வாடக்கொரிய அதிபர் அமெரிக்கா செல்ல திட்டம் !

- in டாப் நியூஸ்
44
Comments Off on வாடக்கொரிய அதிபர் அமெரிக்கா செல்ல திட்டம் !
டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் கிம் ஜாங் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்  சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில்  பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்ததாகவும், வட கொரியாவில் உள்ள  அணு ஆயுத கிடங்குகள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்தார். மேலும் இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்றும் கிம் கூறினார். இதனை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், கிம் ஜாங்கை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார்.

இதனையடுத்து டிரம்பின் அழைப்பை ஏற்று கிம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்