வாசிக்கும் உறுதிமொழியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பின்பற்றுவது இல்லை

- in டாப் நியூஸ்
62
Comments Off on வாசிக்கும் உறுதிமொழியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பின்பற்றுவது இல்லை

சென்னை,

சட்டப்படிப்பை முடித்த சுமார் 450 மாணவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நேற்று வக்கீலாக பதிவு செய்தனர். இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் நிகழ்ச்சி பார் கவுன்சில் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் குருமூர்த்தி தலைமை தாங்கினார்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவருக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

பார் கவுன்சில் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வதால் அவருக்கு எதிராக சில அ.தி.மு.க. வக்கீல்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இதனால் பார் கவுன்சில் அலுவலகத்தை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

பார் கவுன்சில் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கமிட்டியின் தலைவராக அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் உள்ளார். இவர் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:–

வக்கீலாக பதவி ஏற்கும்போது, நீங்கள் வாசித்த உறுதிமொழி கையேட்டை பத்திரமாக வைத்திருந்து அதை தினமும் படிக்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் பதவி ஏற்கும்போது வாசிக்கும் உறுதிமொழியை தீவிரமாக பின்பற்றுவதில்லை. வக்கீல்கள் தொழிலின் மாண்பை மனதில் பதியவைக்கும் விதமாக இந்த உறுதிமொழிகளை தினமும் படிக்க வேண்டும்.

நீதிமன்றத்துக்கு வக்கீல்கள் உரிய மரியாதை கொடுக்கவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், பொதுமக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைந்துவிடும். எல்லா இடங்களிலும் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். எனவே, நல்ல வக்கீல்களை தேடிச்சென்று நீங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

வக்கீல்கள் தினமும் சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் பிறப்பிக்கும் தீர்ப்புகளையும் படிக்க வேண்டும். இதை செய்தால் தான் சட்ட ஞானம் அதிகரிக்கும். வக்கீல் தொழில் மட்டும் தான் வாழ்நாள் முழுவதும் சட்டத்தை படித்துக்கொண்டே இருக்க வேண்டிய தொழிலாகும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மூத்த வக்கீல்கள் ஏ.தியாகராஜன், ஆர்.சிங்காரவேலன், என்.சந்திரசேகரன், எஸ்.பிரபாகரன் ஆகியோர் புதிய வக்கீல்களை வாழ்த்தி பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த ஆடிட்டர் குருமூர்த்தியிடம், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் குறித்து விமர்சனம் செய்தது குறித்து கேட்டபோது, இதுகுறித்து ‘துக்ளக்’ பத்திரிகையில் விரிவாக எழுதியுள்ளதாக கூறினார்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்