வயது கூடிய பெண்ணுடன் உறவு வைத்தல் என்னவாகும் ?

- in அந்தரங்கம்
170
Comments Off on வயது கூடிய பெண்ணுடன் உறவு வைத்தல் என்னவாகும் ?

வயது வாழ்க்கை:இருமனம் இணைந்து திருமணம் எனும் பந்தத்தில் ஒருமித்த கருத்துக்களோடு ஒன்றாய் இணைந்து பயணிப்பதே வாழ்க்கை. நாம் வாழ்வின் அங்கமாய் வாழ்நாள் முழுதும் நம்முடன் பயணிக்க கூடிய துணையை தேர்ந்தெடுக்க எவ்வளவு வரைமுறைகள் இருக்கின்றன. அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என பலவற்றை முன் வைக்கிறார்கள். இவை அனைத்தும் முன்னோர்களின் கருத்துக்கள் என்பார்கள். நம் முன்னோர்கள் எதையும் எளிதில் சொல்லவும் செய்யவும் இல்லை. அப்படி என்ன இருக்கிறது என்றால், அவர்கள் நம்மை எளிதாக புரிந்து வைத்திருக்கிறார்கள். நேரடியாக சொல்லும் போது கேட்காத நாம், அதில் சில மூட நம்பிக்கை எனும் பெயரில் சொன்னால் கேட்கிறோம். அதை முட்டாள்தனம் மற்றும் மூடநம்பிக்கை என்று சொன்னாலும், அதில் அறிவியல், வாழ்வியல் குறித்த பல விஷயங்கள் நிறைந்துள்ளன. இங்கு அதற்கான சில காரணங்களை பார்க்கலாம்.

1 வயது வரம்பு
குறைந்தது 5-7 வருடங்கள் வரை ஆண், பெண்ணிற்கு வயது இடைவேளை இருப்பது நல்லது. இது எதனால் என்பது உங்களுக்கு கீழே படிக்கும் போது புரிய வரும்.

2 உறவுப் பிரச்னை
நீங்கள் செய்வது அனைத்தும் அவர்களுக்கு குழந்தை தனமாக தோன்றும். இதனால் உங்களை கணவனைப் போல பாவிக்காது, குழந்தையைப் போல் நடத்துவார்கள். இது உங்களை சற்று எரிச்சல் அடைய செய்து விடும். இதனால் மனத்தாங்கல் ஏற்படும்.

3 உடல்நிலை
40 முதல் 50 வயதுகளில் பெண்களுக்கு மாதவிடாய் நின்று விடும். இதன் பின் அவர்களுக்கு உடலுறவில் அதிக ஆர்வம் இருக்காது. ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் ஆர்வம் இருக்கும். இதன் காரணமாக தான் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

4 மனநிலை
எப்போதும் பெண்கள் அவர்களின் வயதை காட்டிலும் 4 வயது அதிகமாக யோசிப்பார்கள். ஆனால் ஆண்களால் அவர்களின் வயதிற்கு மட்டுமே யோசிக்க முடியும். அதனால், தன்னை விட வயதுக் குறைந்த பெண்ணை திருமணம் செய்வது தான் சரியான முறை. இல்லையேல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும், இது பிரிவை உண்டாக்கலாம்.

5 உணர்வுகள்
குறிப்பிட்ட வயது வித்தியாசம் இல்லாத போது, ஒருவர் மற்றவரின் உணர்வுகளை சரியாக புரிந்துக்கொள்ள முடியாது. ஒருவருக்கு மற்றவரது உணர்வுகள் கேலியாகவும், விளையாட்டாகவும், அதிகமாக தேவையின்றி வெளிப்படுத்துவதாகவும் தோன்றும். இதனால் வாழ்வில் பிரச்சனைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

6 கருத்தரிப்பு
ஓர் ஆணுக்கு விந்தின் வலிமை அவனது 35 வயது வரை நல்ல வீரியத்துடன் இருக்கும். ஆனால், பெண்களுக்கு 30 எட்டும் போதே கரு முட்டையின் வலிமை குறைய தொடங்கிவிடும். இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் அபாயம் இருக்கிறது.

முக்கியமாக காதலில், ஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்தால், உடலுறவில் இருந்து வாழ்வியல் மனநிலை வரை பல விஷயங்களில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்ததாலேயே செய்ய கூடாது என கூறியிருக்கிறார்கள் முன்னோர்கள்.

Facebook Comments

You may also like

மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா ?

இரகசியகேள்வி-பதில்:கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில்