ரோகித் அரைசதம்: மும்பை வெற்றி

- in கிரிக்கெட்
104
Comments Off on ரோகித் அரைசதம்: மும்பை வெற்றி

புனே: சென்னைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச, மும்பை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. சென்னை அணிக்கு ரெய்னா (75), அம்பதி ராயுடு (46) கைகொடுத்தனர். மும்பை அணி சார்பில் மெக்லீனகன், குர்னால் பாண்ட்யா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணி, 19.4 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (56), சூர்யகுமார் யாதவ் (44), லீவிஸ் (47) நம்பிக்கை அளித்தனர்.

Facebook Comments

You may also like

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி

இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட்