ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை

- in டாப் நியூஸ்
91
Comments Off on ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை

பெங்களூரு: கர்நாடகா தேர்தல் பிரசாரத்திற்கு வந்த காங்., தலைவர் ராகுலின் விமானம் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சியான காங்., பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் காங். தலைவர் ராகுல் கர்நாடக மாநிலத்தில் வட மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்காக விமானத்தில் பயணம் செய்தார். அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, ஹூப்ளி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ராகுல் உள்பட அனைவரும் பத்திரமாக இறங்கினர்.

விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சி கோரிக்கை டில்லி விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்