ராகுல் தலைமையில் இன்று ஜன் ஆக்ரோஷ் மெகா கூட்டம்

- in டாப் நியூஸ்
80
Comments Off on ராகுல் தலைமையில் இன்று ஜன் ஆக்ரோஷ் மெகா கூட்டம்

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று டில்லியில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பல்வேறுவிமர்சனங்களை செய்து வரும் காங்கிரஸ்தலைவர் ராகுல், 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்நோக்கியும் மெகா கூட்டணிக்கு மாநில கட்சிகளை அழைப்பு விடுக்கும்விதமாக இன்று டில்லியில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் மெகா கூட்டம் நடத்துகிறார். இதில் மூத்த தலைவர் சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இது குறித்து காங். அகில இந்திய பொதுச்செயலர் அசோக் கெலாட் கூறியது, கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. வங்கி மோசடி , பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தலித்துகளுக்கு எதிரான வன்முறை, பொருளாதார சீர்குலைவு போன்றவற்றால் மக்கள் மிகவும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனை வெளிப்படுத்தும்விதமாக இன்று நடக்க உள்ள கூட்டம் மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலிக்கும் என்றார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்