ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி அபார வெற்றி

- in Sports
66
Comments Off on ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி அபார வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் ஒன்றான பிரான்ஸ் மற்றும் பெரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ், பெரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் 34-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கில்லான் மொபாபே அபாரமாக தனது அணிக்காக ஒரு கோல் அடித்து 1-0 என்ற கோல்கணக்கில் தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்து இரண்டாம் பாதியில் இந்த கோலை சமன்படுத்த பெரு அணி பெரும் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் போடாததால் இறுதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டென்மார்க் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

Facebook Comments

You may also like

துனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டம்