ரஜினியின் ‘2.0’ படத்தை அடுத்த வருடம் வெளியிட முடிவு

- in சினிமா
106
Comments Off on ரஜினியின் ‘2.0’ படத்தை அடுத்த வருடம் வெளியிட முடிவு
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தை, அடுத்த வருடம் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஹிந்தி நடிகர் அக்‌ஷய்  குமார் வில்லனாகவும், ஏமி ஜாக்சன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஏற்கெனவே ரிலீஸான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி  இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த வருட இறுதியில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் இன்னும் ரிலீஸாகவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதத்துடன் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவுற்றது. அதன்பிறகு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’வே கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும்  ரிலீஸாகிவிட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்காவது ‘2.0’ ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இன்னும் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை. எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்யத் தயாரிப்புத் தரப்புத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி