யாரிடமும் வாய்ப்பு பிச்சை கேட்க மாட்டேன்: இலியானா

- in Featured, சினிமா
80
Comments Off on யாரிடமும் வாய்ப்பு பிச்சை கேட்க மாட்டேன்: இலியானா

மும்பை: எனக்கென ஒரு கவுரவம் இருப்பதால் பட வாய்ப்புகளுக்காக பிச்சை எடுக்க மாட்டேன் என நடிகை இலியானா தெரிவித்துள்ளார். தெலுங்கு படமான தேவதாஸு மூலம் நடிகையானவர் இலியானா. தெலுங்கு தியரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். தயாரிப்பாளர்கள் அவருக்கு கோடிக் கணக்கில் கொடுத்து நடிக்க வைக்க தயாராக இருந்தனர். இந்நிலையில் பாலிவுட் சென்ற அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

பாலிவுட்டில் சிரமப்பட்டு வந்த இலியானாவுக்கு அக்ஷய் குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்த ருஸ்தம் படம் அண்மையில் வெளியாகி ஹிட்டானது. இதனால் அவர் ஆறுதல் அடைந்துள்ளார்.

இரண்டு படங்கள் இலியானா தற்போது பத்ஷாஹோ மற்றும் முபாரகான் ஆகிய இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். வாய்ப்புகள் வந்து குவியாவிட்டாலும் வருவதை வைத்து மகிழ்ச்சியாக உள்ளார் இலியானா.

பாலிவுட் படங்களில் நடிக்க மிகவும் பிடித்துள்ளது. ஆனால் இங்கு வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது என்று இலியானா தெரிவித்துள்ளார்.
பிச்சை கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாவிட்டால் பாலிவுட் நம்மை தூக்கி எறிந்துவிடும். நான் என் கடின உழைப்பால் இந்த நிலையை அடைந்துள்ளேன். எனக்கு என கவுரவம் உள்ளதால் நான் யாரிடமும் வாய்ப்பு பிச்சை கேட்க மாட்டேன் என்கிறார் இலியானா.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி