மோடியை கொல்ல சதி என்பது பொய் இது பாஜகவின் தந்திரம் -காங்கிரஸ்

- in டாப் நியூஸ்
51
Comments Off on மோடியை கொல்ல சதி என்பது பொய் இது பாஜகவின் தந்திரம் -காங்கிரஸ்
பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதி செய்துள்ளதாகவும், இது தொடர்பாக அவரகள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாகவும், நேற்று மகாராஷ்டிரா போலீசார் மத்திய உளவுத்துறைக்கு கொடுத்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ராஜீவ் காந்தி படுகொலை போல் மனித வெடிகுண்டு உதவியுடன் மோடியை கொல்ல சதி என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மோடியை கொல்ல சதி என்ற தகவலின்மூலம் அனுதாபம் ஏற்படுத்த முயல்வதாகவும், தோல்வி மேல் தோல்வி பெற்று வரும் பாஜக செய்யும் தந்திரமே இந்த கொலை சதி என்ற தகவல் என்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் சஞ்சய் நிருபம் தனது டுவிட்டரில் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

மோடி கொலை முயற்சி என்ற தகவல் சரிதானா? என்பதை தீர விசாரித்தால் அதன் பின்னால் ஒளிந்திருப்பது எது? என்பது தெரியவரும் என்றும் சஞ்சய் மேலும் கூறியுள்ளார். பிரச்சனையை திசைதிருப்பும் யுக்தியாக இந்த தகவல் இருந்தால் அதற்கு மக்கள் சரியான தண்டனையை தேர்தலின்போது தருவார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்