மேகாலயா அரசியலில் திடீர் திருப்பம்: 5 காங். எம்.எல்.ஏ.க்கள் திடீர் விலகல்

- in டாப் நியூஸ்
111
Comments Off on மேகாலயா அரசியலில் திடீர் திருப்பம்: 5 காங். எம்.எல்.ஏ.க்கள் திடீர் விலகல்

ஷில்லாங்க்:மேகாலயா அரசியலில் திடீர் திருப்பமாக ஆளும் காங். கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் பா.ஜ. கூட்டணியில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேகாலாவில் ஆளும் காங். கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக முகுல்சங்மா உள்ளார். மொத்தமுள்ள 60 சட்டசபை உறுப்பினர்களில் காங். கட்சிக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.இந்நிலையில் இக்கட்சியைச் சேர்ந்த 5 காங். எம்.எல்.ஏ.க்கள் இன்று ராஜினாமா செய்தனர். தவிர காங். கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. ரெம்மிங்டன் பைங்குரோப், மற்றும் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒரே நாளில் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் மேகாலயா அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த 8 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ. கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியில் ஐக்கியமாக உள்ளனர். மேகாலயா சட்டசபையின் பதவி காலம் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகிறது. மேலும் நாகாலாந்து, திரிபாபு ஆகிய சட்டசபைகளுக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்துள்ளார்.இதையடுத்து பா.ஜ. கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி உள்ளதால் ராஜினாமா செய்த 8 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ. கூட்டணியில் ஐக்கியமாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்