முன்னாள் நீதிபதி கர்ணனனின் கட்சி தொடங்கினார் !

- in டாப் நியூஸ்
72
Comments Off on முன்னாள் நீதிபதி கர்ணனனின் கட்சி தொடங்கினார் !
கொல்கத்தா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி கர்ணன், பதவியில் இருக்கும்போது பல்வேறு சர்ச்சைகளில் அடிபட்டவர். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை விமர்சனம் செய்ததால் நீதிபதியாக இருக்கும்போதே சிறை சென்றவர்
இந்த நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் நீதிபதி கர்ணன், அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். தற்போது கட்சியும் ஆரம்பித்துவிட்டார். இன்று அவர் ‘ஊழல் எதிர்ப்பு
டைனமிக் கட்சி’ என்ற பெயரில் கட்சி தொடங்கி அதன் கொடியையும் அவர் அறிமுகம் செய்துள்ளார்.

நீலம், மஞ்சள் மற்றும் பச்சை வண்ணம் கொண்ட இந்த கட்சியின் கொடியின் நடுவில் ஒரு கை லஞ்சம் வாங்குவது போலவும் இன்னொரு கை லஞ்சம் பெறுவது போலவும், அதை ஒரு கை தடுப்பது போலவும் உள்ளது. மேலும் தன்னுடைய கட்சி வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்