முதல் திருமண நாளில் மனைவியை கொன்ற இளைஞர் !

- in சமூக சீர்கேடு, டாப் நியூஸ்
132
Comments Off on முதல் திருமண நாளில் மனைவியை கொன்ற இளைஞர் !
சென்னையில் முதலாமாண்டு திருமண நாளன்று கணவன், மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், பொறியியல் பட்டதாரியான இவர் மதுமிதா என்ற பெண் பொறியியல் பட்டதாரியை காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
மதுமிதா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் வெங்கடேசனுக்கு நிரந்தர வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
hus
இந்நிலையில் நேற்று வெங்கடேசன் – மதுமிதா தம்பதியினருக்கு முதலாமாண்டு திருமண நாள். வழக்கம் போல் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போகவே ஆத்திரமடைந்த வெங்கடேசன், மதுமிதாவை கத்தியால் குத்தியுள்ளார். பின் வெங்கடேசனும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் வெங்கடேசன் அலறியுள்ளார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதுமிதா உயிரிழந்தார். வெங்கடேசன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்