முதல்வர் அளித்த காசோலை திரும்பி வந்ததால் அதிர்ச்சி

- in டாப் நியூஸ்
56
Comments Off on முதல்வர் அளித்த காசோலை திரும்பி வந்ததால் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பரிசாக அளித்த காசோலை வங்கியில் திருப்பி அனுப்பட்டதால்  மாணவர் அதிர்ச்சியடைந்தார். 
உத்தர பிரதேசத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.5 சதவிகித மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 7 வது இடம் பிடித்த மாணவன் அலோக் மிஸ்ராவிற்கு கடந்த 29ம் தேதி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை பரிசாக அளித்தார்.
இதனை மாணவனின் தந்தை வங்கியில் டெபாசிட் செய்தார், ஆனால் அந்த காசோலை திருப்பி அனுப்பட்டது. இதனையடுத்து மாணவனின் தந்தை வங்கிக்கு சென்று விசாரித்தபோது காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் காசோலை திருப்பி அனுப்பப்பட்டற்கான அபராதத் தொகையும் வங்கி அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.
cm
இதனையடுத்து இந்த பிரச்சனை வெளியே தெரிந்துவிட்டால் சர்ச்சையாகி விடும் எனக் கருதி உடனடியாக உத்தர பிரதேச பள்ளிக்கல்வித்துறை மாணவன் அலோக் மிஸ்ராவைப் அழைத்துத் திருப்பி அனுப்பப்பட்ட காசோலைக்கு பதிலாக வேறு காசோலையை வழங்கியது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்