மின்சாரம் கணெக்கெடுக்க சென்ற அரசு ஊழியர் பாலியல் அத்துமீறல்

- in டாப் நியூஸ்
51
Comments Off on மின்சாரம் கணெக்கெடுக்க சென்ற அரசு ஊழியர் பாலியல் அத்துமீறல்
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மின்சாரம் கணெக்கெடுக்க சென்ற அரசு ஊழியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் ஜெயராமன் என்கிற மின்வாரிய அலுவலக கணக்கீட்டு ஊழியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மன்னார்குடியில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு ஜெயராமன் மின் கட்டண அளவை கணக்கெடுப்பு செய்ய சென்றார். அந்த வீட்டில் 21 வயது மதிப்புள்ள ஒரு பெண்ணும், அவரின் குழந்தையும் இருந்தனர்.
வீட்டிற்குள் சென்ற ஜெயராமன் மின் தொகை ரூ.500 வருகிறது. ஆனால், நீங்கள் ரூ.100 கொடுத்தால் போதும். இனிமேல் உங்களுக்கு மிகவும் குறைவாகவே மின் தொகை போட்டுத்தருவேன் என ஆசை வார்த்தை பேசியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண் சரியான தொகையை பதிவு செய்யும் படி கூறியுள்ளார்.
அப்போது திடீரெனெ அப்பெண்ணை அணைத்து ஜெயராமன் முத்தம் கொடுத்துள்ளார். மேலும், பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியைடைந்த அப்பெண் அவரை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு, தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அப்பெண்ணின் கணவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஜெயராமன் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள அவரை தேடி வருகின்றனர்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்