மினிமம் பேலன்ஸ்: எஸ்.பி.ஐ., விதித்த அபராதம் ரூ.1,771 கோடி!

- in டாப் நியூஸ்
76
Comments Off on மினிமம் பேலன்ஸ்: எஸ்.பி.ஐ., விதித்த அபராதம் ரூ.1,771 கோடி!

புதுடில்லி: எஸ்.பி.ஐ., வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் ‛மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து, ரூ.1,771 கோடியை அபராதமாக வங்கி வசூலித்துள்ளது.

மினிமம் பேலன்ஸ்:

 

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5,000 வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இதன்படி பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000-மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000-மும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000-மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000-மும் வைத்திருக்க வேண்டும். இந்நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது.

ரூ.1,771 கோடி!

இந்நிலையில் ‛மினிமம் பேலன்ஸ்’ வைத்திருக்காத பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் என்ற பெயரில் இதுவரை 1,771.77 கோடி ரூபாயை எஸ்.பி.ஐ., எடுத்திருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சா் ஷிவ்பிரதாப் சுக்லா பார்லி.,யில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்