மிசோரமில் காங்கிரஸ், பாஜ கூட்டணி மேலிட தலைவர்கள் அதிர்ச்சி

- in டாப் நியூஸ்
78
Comments Off on மிசோரமில் காங்கிரஸ், பாஜ கூட்டணி மேலிட தலைவர்கள் அதிர்ச்சி

ஐஸ்வால்: தேசிய அளவில் எதிரும், புதிருமாக உள்ள காங்கிரஸ், பாஜ கட்சிகள் மிசோரம் மாநிலத்தில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் அதிகாரத்தை கைப்பற்ற கூட்டணி அமைத்திருப்பது அக்கட்சிகளின் மேலிட தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கிழக்கு மாநிலமான, மிசோரமில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.  லால்தன்வாலா முதல்வராக இருக்கிறார். இங்கு சக்மா மாவட்ட மக்களுக்காக, சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில், 1972ல் துவங்கப்பட்டது. இந்த கவுன்சிலுக்கான தேர்தல், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கவுன்சில் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், மிசோரம் தேசிய முன்னணி, எட்டு இடங்களிலும், காங்கிரஸ் ஆறு இடங்களிலும், பா.ஜ. ஐந்து இடங்களிலும் வென்றன.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததை தொடர்ந்து மிசோரம் தேசிய முன்னணியுடன், பா.ஜ. கூட்டணி அமைக்கும் என, பா.ஜ. தேசியத் தலைவர் அமித் ஷா கூறியிருந்தார். ஆனால், மிசோரம் மாநில காங்கிரஸ், பா.ஜ., தலைவர்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, கவுன்சில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளனர்.

உள்ளூர் தலைவர்களின் இந்த முடிவு, பா.ஜ. மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மிசோரம் மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான, ஜோதின்லுங்கா கூறுகையில், ‘’சக்மா தன்னாட்சி கவுன்சிலுக்கு மட்டுமே, பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம், என்றார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்