மாணவிகளை மட்டும் ‘வீட்ட வாங்கோ’ என்று அழைக்கும் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்

- in சமூக சீர்கேடு
329
Comments Off on மாணவிகளை மட்டும் ‘வீட்ட வாங்கோ’ என்று அழைக்கும் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்

யாழ் பல்கலைக்கழ கலைப்பீடப் பேராசிரியர் ஒருவர் தன்னிடம் கல்விகற்கும் மாணவிகளில் சிலரை தனது வீட்டுக்கு வந்து போகும்படி தொல்லைப்படுத்தி வருதாக மாணவிகள் தரப்பில் செய்தி கசிந்துள்ளது.

இவரிடம் சந்தேகங்கள் கேட்க முயலும் மாணவிகளில் குறிப்பிட்ட சிலரை வீட்டுக்கு வாருங்கள் சொல்லித் தருகின்றேன் என அன்பாக அழைக்கின்றாராம்.

இவரை நம்பி அவரது வீட்டுக்கு நேரத்தில் சென்ற மாணவிகள் மூன்று பேருக்கு அங்கு அதிர்ச்சிதானாம் காத்திருந்தது. யாருமற்ற நிலையில் தனியே அந்த வீட்டில் பேராசிரியர் மேலாடை இன்றி ரன்னிங்சோட்ஸ் போட்டுக் கொண்டு மாணவிகளின் சந்தேகங்களுக்கு விடையளித்துள்ளார்.

அத்துடன் தனது வீட்டில் தான் செய்யும் வீட்டுத் தோட்டத்திற்கு அவர் அம் மாணவிகளை அழைத்துச் சென்று காட்டியுள்ளாராம்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் மாலை 5 மணிக்குப் பின்னரே வீட்டுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரது வீ்ட்டுக்குச் சென்ற மாணவிகளில் ஒருவருக்கு தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாகவும் ஏதாவது சந்தேகம் இருந்தால் தனது வீ்ட்டுக்குத் தனியே வருமாறும் அவர் மாணவிக்கு தொல்லை கொடுத்து வருவதாக மாணவியின் நண்பிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

You may also like

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர்