மழைநீரை சேமிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்

- in டாப் நியூஸ்
69
Comments Off on மழைநீரை சேமிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்

புதுடில்லி: அடுத்த தலைமுறையினருக்காக நாம் அனைவரும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ரேடியா மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

பெருமை

காமன்வெல்த் போட்டியில், இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நமது வீரர்கள் விளையாடியுள்ளனர். தேசிய கொடியுடன் வெற்றி பெற்ற வீரர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவர்கள் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்

உடற்பயிற்சி

உடல் தகுதி குறித்து எனக்கு ஏராளமான கடிதங்கள் மற்றும் ஆலோசனைகள் வந்துள்ளன. இது பெருமை அளிக்கிறது. அனைவரும் உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல்நலத்துடன் இருக்க யோகா முக்கியமானது. 4வது சர்வதேச யோகா தினத்தை சிறந்த தினமாக மாற்ற வேண்டும்.

தூய்மை இந்தியா

சுத்தமான இந்தியாவுக்கு நமது பங்களிப்பை நாம் அளிப்போம். தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசு அளிக்கும் பயிற்சியில் இணைய வேண்டும். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

தண்ணீர் சேமிப்பு

தண்ணீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனை மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அடுத்த தலைமுறையினருக்காக ஒவ்வொருசொட்டு நீரையும் சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிப்பது குறித்து நமது முன்னோர்களிடமிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்க மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இது தவிர தண்ணீர் சேமிப்பு மற்றும் மேலாண்மைக்காக சராசரியாக 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 150 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்