மருமகனை கொடூரமாக கொலை செய்த மாமனார்

- in டாப் நியூஸ்
54
Comments Off on மருமகனை கொடூரமாக கொலை செய்த மாமனார்
மகளை அடித்ததால் மாமனார் ஆத்திரத்தில் மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதியை சேர்ந்தவர் குணவேல்(32). இவரது மனைவி சாரதா(28). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் குணவேல் சாரதாவை அடித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சாரதா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மகளை அடித்ததால் ஆத்திரமடைந்த சாரதாவின் தந்தை தியாகராஜன், மருமகன் குணவேல் வீட்டிற்கு சென்று ஏன் என் மகளை அடித்தாய் என கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குணவேலை சரமாரியாக குத்தினார். கீழே விழுந்த குணராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், படுகொலை செய்யப்பட்ட குணவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய தியாகராஜனை போலீஸார் தேடி வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்