மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்! வீடியோ இணைப்பு

- in வினோதங்கள்
201
Comments Off on மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்! வீடியோ இணைப்பு
பிறேசிலில் இயற்கைக்கு புறம்பாக பிறந்த மனிதன் ஒருவர் சாதனையில் ஈடுபட்டுள்ளார்.
பிறேசிலின் மொன்ட் சன்தோ பிராந்தியத்தைச் சேர்ந்த 37 வயதான கிளோடியோ வியயிரா டி ஒலிவெயிரா என்பவர் விநோதமான பாதிப்புடன் வாழ்ந்து வருகிறார்.
அவர், தலை முதுகுப்புறமாக தலைகீழாக தோற்றமளிக்கும் நிலையில் பிறந்த நபரொருவர் உலகத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.
கிளைடியோ பிறந்த போது உயிர் பிழைப்பது சாத்தியமற்றது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரை உணவுகளின்று மரணமடைய விடுமாறு ஆலோசனை வழங்கினர்.

எனினும் வைத்தியர்களின் அறிவுரையை மீறிய தாய், அவ்வாறு செய்யவில்லை.
கிளைடியோ அவயங்கள் மிக மோசமாக விகாரமடைந்த நிலையில் பிறந்த போதும், வைத்தியர்களின் ஊகத்தை தவிடு பொடியாக்கியுள்ளார்.
அவர் கணக்கியலாளராகவும் சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் மாறியுள்ளார்.
அவர் நிலை குறித்து கிளோடியோ கருத்து வெளியிடுகையில்,
”நான் சிறுவனாக இருந்தது முதற் கொண்டு எப்போதும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். நான் மற்றவர்களிடம் முழுமையாக தங்கியிருப்பதை விரும்பவில்லை. தற்போது கணக்காளராகவுள்ள நான் வாடிக்கையாளர்களுக்கான ஆய்வை மேற்கொண்டு வருவதுடன் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன் ” என்று கூறினார்.

Facebook Comments

You may also like

சுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..?

அமெரிக்காவின் முன்னணி வர்த்தகச் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் 2017ஆம் ஆண்டில்